இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிபால் பல்கலைக் கழகம் சித்த மருத்துவ பாட திட்டத்தை அங்கீகரித்துள்ளதை போல, அமெரிக்காவிலும் ஒரு புகழ் பெற்ற மருத்துவ கல்லூரி அங்கீகரித்து நடைமுறைக்கும் வந்துள்ளது என்றால், தமிழரின் மருத்துவம் தரணியெல்லாம் பரவுகிறது தானே!
அமெரிக்க நாட்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை கவர்ந்திழுக்கும் தமிழக வர்ம சிகிச்சை, கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மணிப்பாலில் உள்ள தனியார் பல்கலைக்கழத்தில் இந்த வர்ம பட்டமேற்படிப்பை மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தமிழர் மருத்துமான சித்த மருத்துவத்தின் மகத்துவத்தத அறிவியல் ஆய்வுப்பூர்மாக ஓர் அங்கிகாரம் பெற்ற பாரம்பரிய மருத்துவ முறையாகப் பரப்புவது அவசியமென உலகத் தமிழர்கள் குறிப்பாக அமெரிக்கத் தமிழர்கள் விரும்புகின்றனர்.
On behalf of GCSMR we are happy to share this news about few medical students from Morehouse school of Medicine went to India to know about siddha and learn varma therapy in Manipal university.
சித்த மருத்துவம் என்பது தொன்மையான தமிழர் மருத்துவம். இதனை அறிவியல் பூர்வமாக ஆய்விற்கு உட்படுத்தி நவீன மருத்துவத்திற்கு இணையாக கொண்டு செல்ல வேண்டும் என்ற பரந்த நோக்கத்துடன் GCSMR பல ஆராய்ச்சி வல்லுனர்களுடன் இணைந்து செயல்படுகிறது