சரியான நேரத்தில் தினமும் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலை உணவினை 6:45 முதல் 7:30க்குள் எடுத்துக் கொள்ள வேண்டும். மதிய உணவு மதியம் 1 மணிக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு உணவு 6:30 மணி முதல் 7:00 மணிக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவு உண்ணும் பொழுது எதனைத் தவிர்த்து எதனை உண்ண வேண்டும் என்பது சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளை உப்பு அதனை தவிர்த்து விட்டு இந்துப்பு பயன்படுத்தலாம், வெள்ளை சர்க்கரையை தவிர்த்து விட்டு தேன், பனங்கற்கண்டு அல்லது பழங்கள் இவற்றை பயன்படுத்தலாம் ,மிளகாயைத் தவிர்த்து மிளகு, இஞ்சி, பூண்டு போன்றவற்றை பயன்படுத்தலாம், புளிக்குப் பதிலாக கொடம்புளியை பயன்படுத்தலாம்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் மைதா செயற்கை இனிப்பூட்டிகள் செயற்கை நிறமூட்டிகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
அடுத்ததாக கறிவேப்பிலை சுக்கு பெருங்காயம் சீரகம் மிளகு சோம்பு போன்றவற்றை கலந்து எடுத்துக் கொண்டால் உடலின் செரிமானம் அதிகரிக்கும், நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும் மற்றும் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.
அதிக உணவை எடுத்துக் கொள்ளக்கூடாது பிறருடன் அமர்ந்து உண்ண வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் உண்ண வேண்டும், உணவு எடுக்கும் பொழுது உணவை மட்டுமே நாம் கவனித்து உட்கொள்ள வேண்டும்.
தரையில் அமர்ந்து உணவு உண்ண வேண்டும், மெதுவாக மென்று ஒரு ஒருமுறை கடிக்கும் போதும் நன்கு ருசித்து உண்ண வேண்டும்.
நாம் உணவு உண்ணும் போது ஐம்புலன்களும் அந்த உணவின் ருசியினை உணர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
இதனால் நாம் அளவுக்கு அதிகமாக உண்ணுதல் தவிர்க்கப்படும். தேவையான சத்துகள் தேவையான உறுப்புகளுக்கு செல்ல வழிவகை ஏற்படும்.
உணவு உண்ணும் போது செய்யக்கூடாதவைகள்:
1. கைப்பேசி பார்க்கக் கூடாது. 2. தொலைக்காட்சி பார்க்க கூடாது. 3. வேலை செய்யும் போது உணவு உண்ணக்கூடாது. 4. கணினி பார்க்கும்போது உண்ணக்கூடாது. 5. செய்தித்தாள் பார்க்கும்போது உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது. 6. வாகனம் ஓட்டிக்கொண்டே உணவு எடுக்கக் கூடாது.
மேலதிக விவரங்களை அறிய இந்த காணொளியை பார்க்கவும்.
காணொளி: https://www.youtube.com/watch?v=GcC5NXcuOjA&t=49s