சித்தமருத்துவம் மனிதனின் தினசரி ஒழுக்கத்தின் தேவையினை வலியுறுத்துகிறது, அவற்றில் சித்த மருத்துவ சிறப்புகள் மற்றும் சித்த மருத்துவப் பயன்களை இங்கே பார்ப்போம்.
1. காலை 04:30 மணி முதல் 5 மணிக்குள் எழ வேண்டும். இந்தப் பழக்கம் உடலின் அடிப்படை வாழ்க்கை ஆற்றலை ஒழுங்கு படுத்துகிறது. மேலும் மூளையினை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும், கவன சிதறலைக் குறைக்கும். உடற்பயிற்சி, யோகப்பயிற்சி இவற்றுக்கு அதிக நேரம் கிடைக்கும். நமது மூளையில் உள்ள சுரப்பிகளை தூண்டி மன அழுத்தத்தை குறைக்கும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
2. காலை உணவை கண்டிப்பாக உண்ண வேண்டும். இதனை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்கக்கூடாது, இதனால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
3. சித்த மருத்துவ கூற்றின் படி பற்பசையினை தவிர்த்து பற்பொடி பயன்படுத்த வேண்டும். திரிபலா சூரணம், இலவங்கப் பொடி மற்றும் கடல் உப்பு ஆகியவற்றை பற்பொடியாக்கி கலந்து பல் துலக்கலாம். இதனால் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் மன நலம் மேம்படும்.
4. ஆயில் புல்லிங்- தினமும் காலையில் நல்லெண்ணெயை 10 எம் எல் எடுத்து வாயில் 10 நிமிடங்கள் வைத்திருந்து மேலும் கீழும் கொப்பளித்து துப்ப வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
5. காலையில் தினமும் தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். மனித உடல் 70% நீரால் ஆனது, தசை மற்றும் எலும்புகளும் நீரைக் கொண்டிருக்கின்றன.
6. தினமும் காலையில் நீராகாரம் அருந்த வேண்டும். இது நிறைய சத்துக்களை கொண்டது, உடலின் நச்சை நீக்குகிறது, அயர்ச்சியை போக்கி புத்துணர்ச்சி தரும். மூன்று மாதங்கள் தொடர்ந்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம் சித்த மருத்துவத்தின் கூற்று ஆகும்.
மேலே குறிப்பிட்ட வகையில் நமது நாள் ஒழுக்கத்தை அமைத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், நோய்கள் நீங்கும்.
மேலதிக விவரங்களை அறிய இந்த காணொளியை பார்க்கவும்.
காணொளி: https://www.youtube.com/watch?v=GcC5NXcuOjA&t=49s
GCSMR என்ற எங்களது தொண்டு நிறுவனம் சித்த மற்றும் வர்ம மருத்துவர்களைக் கொண்டு மாதம்தோறும் சிறந்த தலைப்புகளில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது பங்கேற்போரின் கேள்விகளுக்கு பதிலும் வழங்கிவருகிறது.இந்த பணிக்கு நன்கொடை தந்து உதவுமாறு உங்களை வேண்டுகிறோம்.