செம்பருத்தி ஒரு அழகான பூச்செடி ஆகும். இது மூலிகை, புதர் அல்லது சிறிய மரமாக வளரக்கூடியது. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட செம்பருத்தி இனங்கள் உணவு மற்றும் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
செம்பருத்தி பூவின் தோற்றம்:
❖ ஒளி வண்ண மலர்கள் ❖ பளிச்சென்ற, வெளிப்படும் தோற்றம் ❖ தனித்தனியாக அல்லது கொத்தாக காணப்படும் ❖ எக்காளம் வடிவ பூக்கள் ❖ சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிறங்கள் ❖ ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட இதழ்கள்
செம்பருத்தி பூவின் சத்துக்கள்:
❖ இயற்கையான அமிலங்கள் ❖ இரும்பு ❖ பாஸ்பரஸ் ❖ கால்சியம் ❖ வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
செம்பருத்தி இலைகளின் சத்துக்கள்:
❖ 2-3% புரதங்கள் ❖ இரும்பு ❖ கால்சியம் ❖ பாஸ்பரஸ்
செம்பருத்தி பயன்கள்:
❖ அழகு: தலைமுடி பராமரிப்பு, சரும பராமரிப்பு ❖ உணவு: தேநீர், சூப்கள், ஜெல்லி, சாலடுகள் ❖ மருத்துவம்: இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு, காய்ச்சல்
செம்பருத்தி ஒரு அழகான மற்றும் பல்துறை தாவரமாகும், இது பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படலாம்.
1. செம்பருத்தி வணங்கா முடியையும் வணங்க வைக்கும் ஒரு சிறந்த மூலிகையாகும். 2. செம்பருத்தி இலையை எடுத்து பசையாக்கி தலை குளித்து வந்தால் முடி மென்மையாக இருக்கும். 3. செம்பருத்தி இலை,சீயக்காய் ,வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து காயவைத்து பொடி செய்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி மிருதுவாக இருக்கும். 4. பொதுவாக நாம் மலர்களைப் பார்த்தாலே நம் மன பதட்டம் குறைந்து மன நிம்மதி கிடைக்கும் என்பர் அதுபோல செம்பருத்தி பூவினை உண்டுவர இதயம் பலம் பெறும். 5. செம்பருத்தி இதழ்கள் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் ஆக சுண்டும் வரை கொதிக்க வைத்து குடித்து வர இதயம் பலம் பெறுவதோடு மிகை ரத்த அழுத்தத்திற்கும் மிகச் சிறந்த மூலிகையாக உள்ளது. 6. மேலும் பக்க விளைவுகள் இல்லாத காரணத்தினால் இதனை அனைவரும் பயன்படுத்தலாம். 7. சிறு குழந்தைகளுக்கு சூடான பாலில் ஒரு பூவினை போட்டு மூடி வைத்தாலே அதன் நிறம் மாறி இயற்கை முறை ரோஸ் மில்க் போல் தோற்றமளிக்கும் .இதனால் குழந்தைகள் ஆரோக்கியத்தோடு வளர்வதோடு உற்சாகமாகவும் பாலினை விரும்பி குடிப்பர். 8. செம்பருத்தி பூக்கள் இந்திய ஆயுர்வேதத்திலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
GCSMR நிறுவனம் சித்த மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவை வேண்டுகிறது.
அழகிற்காக வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி அதிக மருத்துவ குணங்கள் வாய்ந்தது.இதனை பற்றி மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள காணொளியினை பார்க்கவும். - https://youtu.be/VpliUEF2rWQ?si=qgsiaIdvMwoby3sH