Varma Kalai in Tamil

ஒருங்கிணைந்த மருத்துவம் - Integrative Medicine

ஒருங்கிணைந்த மருத்துவம்:

❖ ஒருங்கிணைந்த மருத்துவம் (Integrative Medicine) என்பது பாரம்பரிய மருத்துவ முறைகளையும் , நவீன மருத்துவ முறைகளையும் இணைத்து நோயைக் குணப்படுத்தும் ஒரு அணுகுமுறை.

❖ இதில், நவீன மருத்துவ முறைகளின் நன்மைகளையும், பாரம்பரிய மருத்துவ முறைகளின் குறைந்த பக்க விளைவுகளையும் ஒருங்கிணைத்து நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சில முறைகள்:

1. நவீன மருத்துவம்: மருந்துகள், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை போன்றவை.

2. ஆயுர்வேதம்: மூலிகை சிகிச்சை, யோகா, மசாஜ் போன்றவை.

3. சித்த மருத்துவம்: மூலிகை சிகிச்சை, உணவு முறை போன்றவை.

4. ஹோமியோபதி: நீர்த்துப்போக வைக்கும் மருந்துகள் பயன்படுத்தி சிகிச்சை அளித்தல்.

5. அக்குபஞ்சர்: மெல்லிய ஊசிகளை உடலின் சில புள்ளிகளில் குத்தி சிகிச்சை அளித்தல்.

ஒருங்கிணைந்த மருத்துவத்தின் சில நன்மைகள்:

1. குறைந்த பக்க விளைவுகள்: பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும்.

2. முழுமையான சிகிச்சை:நோயின் அறிகுறிகளையும், மூல காரணத்தையும் களைய உதவும்.

3. நோயாளியின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற சிகிச்சை:ஒவ்வொரு நோயாளியின் தேவைகளுக்கேற்ப சிகிச்சை முறைகள் தேர்ந்தெடுக்கப்படும்.

ஒருங்கிணைந்த மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. சில குறிப்பிட்ட நோய்களுக்கே இது பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு இருந்தால், முதலில் ஒரு நல்ல மருத்துவரை சந்தித்து ஆலோசிப்பது அவசியம்.

ஒருங்கிணைந்த மருத்துவம்:

❖ ஒவ்வொரு மரபு மருத்துவத்துக்கும் தனித்துவம் உள்ளது. அந்த தனித்துவம் வாய்ந்த மருத்துவத்துடன் நவீன மருத்துவத்தையும் சேர்த்து செய்வதே ஒருங்கிணைந்த மருத்துவம்.

❖ ஒருங்கிணைந்த மருத்துவம் என்பது உதாரணமாக மூட்டுவலிக்கு வரும் நோயாளிக்கு மூட்டு வலியினை மட்டும் நிவர்த்தி செய்து அனுப்பாமல் நோயாளியின் அனைத்து பின் புலங்களையும் அறிந்து எதிர்காலத்தில் வேறு ஏதேனும் நோய் தாக்குமா என ஆராய வேண்டும். இதுவே ஒருங்கிணைந்த மருத்துவமாகும்.

❖ இதனை மரபு மருத்துவர்களின் உதவியோடு செய்யலாம். இது ஒன்றுக்கொன்று பக்கவிளைவு ஏற்படுத்தாதவாறு மேற்கொள்ள வேண்டும் உதாரணமாக புற்று நோய்க்கு அலோபதி,சித்த மருத்துவம் மற்றும் வர்ம மருத்துவரின் உதவியோடு நோயினை எதிர்கொள்ளலாம். இது ஒருங்கிணைந்த மருத்துவம் எனப்படும். ஒருங்கிணைந்த மருத்துவத்தில் மூன்று படிகளை கொண்டது.

1. வேகமாக நோய்க்கு தீர்வு காண வேண்டும்.

2. பக்க விளைவுகள் ஏதும் ஏற்படக்கூடாது.

3. விலை குறைவாக இருக்க வேண்டும்.

❖ தீர்க்க முடியாத நோயிற்கு ஒருங்கிணைந்த மருத்துவம் பயன்படுத்தப்படும். உதாரணமாக ஹச் ஐ வி நோயாளர்களுக்கு டாக்டர். தெய்வநாயகம் அவர்கள் 1992 இல் நவீன மருத்துவத்துடன் சித்த மருத்துவதையும் கலந்து எச்ஐவி நோயாளிகளுக்கு கொடுத்து நோயிலிருந்து விடுவித்துள்ளார். இது ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. ஒருங்கிணைந்த மருத்துவத்தை பற்றிய அனுபவம் இல்லாதால் மக்களிடையே பரவாமல் உள்ளது. மேலும் சொரியாசிஸ் போன்ற நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளது. ஆனால் ஹார்ட் அட்டாக் போன்ற நோய்க்கு நவீன மருத்துவமே முதலில் தேவை. ஆகவே ஒரு சில நோய்க்கு எந்த மருத்துவம் சிறந்தது என்பதைவிட எந்த மருத்துவத்தால் நோயாளி பயன்பெறுவார் என்பதும் முக்கியம். ஆகவே ஒருங்கிணைந்த மருத்துவம் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஒருங்கிணைந்த மருத்துவம் என்பது எந்த மருத்துவம் சிறந்தது என்பதை விட நோயாளி பயன்பெறுவாரா? நோயாளிக்கு தீர்வு காண்பதே இதில் முக்கியம்.

❖ இரண்டு வேறு வேறு மருத்துவங்களின் வழி மருத்துவம் மேற்கொண்ட நோயாளிக்கு முழு தீர்வு காண முடியவில்லை எனில் அவர்கள் ஒருங்கிணைந்த மருத்துவத்தினை அணுகலாம்.

ஒருங்கிணைந்த மருத்துவத்தின் செயல்பாடுகள்:

1. மணிப்பால் பல்கலைக்கழகத்தின் உதவியோடு ஒருங்கிணைந்த மருத்துவத்தை மேற்கொள்கிறோம்.

2. மோர்ஹவுஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசன் என்கிற அமெரிக்காவின் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த மருத்துவத்தினை ஒரு கல்வியாக அங்கீகரித்துள்ளது.

3. எந்தெந்த மருந்து நிறுவனங்கள் ஒருங்கிணைந்த மருத்துவத்தில் ஆர்வமாக உள்ளதோ அதற்கு கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறோம்.

ஒருங்கிணைந்த மருத்துவம் மக்களிடம் சென்றடைய அரசும், அரசு அதிகாரிகளும் உதவி செய்ய வேண்டும்.அரசு உரிய வழிகாட்டுதல்களின் படி ஒருங்கிணைந்த மருத்துவத்தினை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்.இதன் மூலம் மக்கள் அதிக பயன் பெறுவர். தற்போதைய நிலை படி ஒருங்கிணைந்த மருத்துவத்தின் ஆராய்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்கி ஒருங்கிணைந்த மருத்துவத்தை வளர்க்க அரசு முன் வர வேண்டும்.

ஒருங்கிணைந்த மருத்துவத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ள கீழ்காணும் காணொளியை பார்க்கவும். https://youtu.be/YuVHS2k4_SA?si=FdE7oM7JgNidpPdF

GCSMR என்ற எங்களது தொண்டு நிறுவனம் சித்த மருத்துவத்தை பரப்பும் முயற்சியில் பல்வேறு புத்தகங்களை வெளியிட்டு வருகிறது இவற்றின் மூலம் மாணவர்களும் பொதுமக்களும் பயனடையும்படியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிக்கு நன்கொடை தந்து உதவுமாறு உங்களை வேண்டுகிறோம்.

Join us in our endeavor to bring the wisdom of Siddha to the world and enable individuals to lead healthier lives.