பிரண்டை ஒரு அற்புதமான மூலிகை தாவரம். இதன் இலை, தண்டு, வேர் என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.வலி நிவாரணம்,உடல் ஆரோக்கியம்,எலும்பு வலிமை,முதுகுவலி மற்றும் கழுத்துவலிக்கு பிரண்டை துவையல் சிறந்த நிவாரணம் அளிக்கிறது.மூல நோய்க்கு பிரண்டை துவையல் ஒரு பயனுள்ள மருந்தாகும்.இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பிரண்டை துவையல் உதவுகிறது.எலும்பு முறிவு விரைவில் குணமாக பிரண்டை துவையல் உதவும்.
வெற்றிலை என்பது Piper betle என்ற தாவரத்தின் இலை ஆகும். வெற்றிலை கொடி வகை தாவரம். இது தென்கிழக்கு ஆசியாவில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஜீரணத்தை மேம்படுத்தும், வயிற்று வலியைக் குறைக்கும்,இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சையளிக்கும். புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை வெற்றிலை இலைகள் கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
கரிசலாங்கண்ணி பாரம்பரிய உணவு மட்டுமல்ல, இயற்கையான மருந்தும் கூட. இதை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைத்து, ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். இரத்த சர்க்கரை கட்டுப்படுத்துகிறது,குடல் புண்களை ஆற்றுகிறது,கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது,சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது
கற்றாழை இலைகளின் உள்ளே இருக்கும் பசை தான் ‘கற்றாழை ஜெல் ‘ என்று அழைக்கப்படுகிறது. இதில்தான் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் இதில் அடங்கும். ஆகவே அனைத்து நோய்களுக்கும் மிக சிறந்த மூலிகையாக உள்ளது,குடல் புண்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக உள்ளது, தீ புண்கள் மற்றும் வெட்டு காயங்களுக்கு கற்றாழை சோறு வைத்தால் அது சரியாகும்,,கற்றாழை சோறு தலையில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து வர கண் எரிச்சல் குறையும். குடல் புற்றுநோய்களுக்கு கற்றாழை ஜூஸ் குடிக்க பாதிப்பு குறையும். வயிறு மற்றும் குடல் சார்ந்த நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக கற்றாழை உள்ளது.கற்றாழையிலிருந்து வரும் பால் வீக்கங்களை குணப்படுத்தும். இது அடிபட்ட வீக்கங்களையும் கட்டுப்படுத்தும்.முடி வளர்ச்சிக்கு கற்றாழை பெரும் பங்கு வகிக்கிறது
கறிவேப்பிலை, தென்னிந்திய சமையலில் மணமூட்டும் இன்றியமையாத மூலிகை.கறிவேப்பிலை பயன்கள் மற்றும் சத்துக்கள் அதிகம்.கருவேப்பிலையை பயன்படுத்தி ஹேர் ஆயில் செய்யலாம்,நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது,செரிமானத்தை மேம்படுத்துகிறது,சர்க்கரை நோயை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு,கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாக உள்ளது, இரத்த சோகைக்கு மிக சிறந்த மருந்தாக உள்ளது.
பல்வேறு நோய்களுக்கு சங்குப்பூ ஒரு அற்புதமான மருந்தாகும். சங்குப்பூ ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது,சங்குப்பூ தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்தாகும்,உணவுக்கு நிறமூட்டியாக இதனை பயன்படுத்தலாம்,சங்கு பூவின் விதைகளை பொடியாக்கி உண்பதால் குடல் புழுக்கள் நீங்கும்.
துளசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்,சளி, இருமல் போன்ற சுவாச நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்,மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.புனிதமான தாவரமாக கருதப்படுவதால், வீட்டில் துளசி செடி வளர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
இரவில் நான்கு முதல் ஐந்து நந்தியாவட்டை பூக்களை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.இதனை ‘ஊறல் குடிநீர்’ என்றும் அழைப்பர். இந்த நீரினை கண்கள் கழுவ பயன்படுத்தலாம்,இந்த பூக்களை நன்கு கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அதனை ஒரு சொட்டு கண்களில் விட்டு கழுவலாம்,இளம் பூவினை எடுத்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து ஒரு ஒரு சொட்டு இரு கண்களுக்கும் விடலாம்.
செம்பருத்தி வணங்காம முடியையும் வணங்கா வைக்கும் ஒரு சிறந்த மூலிகையாகும்,செம்பருத்தி இலையை எடுத்து பசையாக்கி தலை குளித்து வந்தால் முடி மென்மையாக இருக்கும்.செம்பருத்தி இலை,சீயக்காய் ,வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து காயவைத்து பொடி செய்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி மிருதுவாக இருக்கும்.