கற்றாழை நமது தோட்டங்களிலும், ஜன்னல் வைத்த செடி களிலும் அழகு சேர்க்கும். கற்றாழை வெறும் அழகுக்கான செடி இல்லை. கற்றாழை இயற்கையின் அற்புதமான கிளை போன்ற கற்றாழை, பல மருத்துவக் குணங்கள் கொண்டது. சரும பிரச்சனைகள் முதல் குடல் நலம் வரை பல பயன்கள் தரும். இந்த செடியைப் பற்றியும், வீட்டிலேயே அதைப் பயன்படுத்துவது எப்படி என்பது பற்றியும் இன்று பார்க்கலாம்.
கற்றாழையின் அற்புதங்கள்:
கற்றாழை இலைகளின் உள்ளே இருக்கும் பசை தான் ‘கற்றாழை ஜெல் ‘ என்று அழைக்கப்படுகிறது. இதில்தான் மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
சரும நண்பர்: கற்றாழை ஜெல் ஒரு சிறந்த இயற்கைமருந்து . வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்குவது மட்டுமல்லாமல், சிறிய காயங்கள் மற்றும் வடுக்கள் போன்றவற்றைக் குறைப்பதற்கும் உதவுகிறது.
குடல் ஆரோக்கியம்: கற்றாழை ஜூஸ் குடலை சுத்தம் செய்து மலச்சிக்கல் போக்க உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால், கவனம் தேவை! அதிகமாகக் குடிப்பது பாதுகாப்பானது அல்ல.
நோயெதிர்ப்பு சக்தி: வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் திறன் கொண்ட பொருட்கள் கற்றாழையில் உள்ளன.
இவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் எனக் கூறப்படுகிறது.
கற்றாழையின் பயன்கள்:
கற்றாழை கண் திருஷ்டியை நீக்குவதாக நம்பப்படுகிறது.
‘குமரி’ என்ற வேறு பெயரும் இதற்கு உண்டு. குமரிக்கண்டம் முழுவதும் பரவி காணப்பட்டதாக கூறப்படுகிறது
கற்றாழையின் இலையே மூலிகையாக பயன்படுகிறது. ஆகவே இது ‘இளைமூலி’ என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது.
கர்பப்பை நோய்களுகளுக்கான மருந்து:
➤ கர்ப்பப்பை நோய்களுக்கு சிறந்த மருந்தாக உதவுகிறது.
➤ ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன் தூண்டி அதை அதிக அளவில் சுரக்க செய்வதனால் இது பெண்களுக்கு மிக சிறந்த மூலிகையாக உள்ளது.
➤ கர்ப்பப்பை நோய்கள் அனைத்திற்கும் இது மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. கற்றாழை சோறு மற்றும் திரிபலா சூரணம் ஒன்று சேர்த்து சிறிது நேரம் வைத்து பின் அதனைப் பிரிந்து எடுத்தால் கற்றாழையின் சாறு வெளிப்படும் இதனை பனைவெல்லம் கலந்து பருகி வந்தால் கர்ப்பப்பை கோளாறு நீங்கும். மேலும் கர்ப்பப்பை கட்டி, மாதவிடாய் கோளாறு போன்ற நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாக உள்ளது.
➤ மாதவிடாய் கால வயிற்று வலிக்கு கற்றாழை சோறு மிகச் சிறந்த மருந்து வெந்தய பொடி ,கற்றாழை சாறு மற்றும் பனைவெல்லம் சேர்த்து 15 நாட்கள் உண்டு வர மாதவிடாய் கால வயிற்று வலி சரியாகும்
கண் எரிச்சல்:
கண் எரிச்சல், வாந்தி, சிறுநீர் பாதை எரிச்சல், வாய் கசப்பு மற்றும் பித்தத்தினால் ஏற்படும் உடல் சூடு ஆகியவற்றிற்கு கற்றாழை சாறு சிறந்த பயனளிக்கும்.
கண்ணில் ஒரு துளி கற்றாழை சாறு விட்டால் கண் எரிச்சல் தீரும். கணினியில் பணிபுரிபவர்கள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்மீது கற்றாழை சாறு விட்டால் கண் எரிச்சல் குணமாகும்.
உடல் சூடு:
நன்னாரி மணப்பாகுடன் கற்றாழை சாறு சேர்த்து குடித்து வர பித்த சூடு குறையும்.
கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர மலச்சிக்கலுக்கான வீட்டு வைத்தியம் மற்றும் இதனை உள்ளுக்குள் எடுத்துக் கொண்டால் கல்லீரல் பாதுகாக்கப்படும்.
கற்றாழை சோறின் பயன்கள்:
➤ உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் இதில் அடங்கும். ஆகவே அனைத்து நோய்களுக்கும் மிக சிறந்த மூலிகையாக உள்ளது.
➤ குடல் புண்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.
➤ தீ புண்கள் மற்றும் வெட்டு காயங்களுக்கு கற்றாழை சோறு வைத்தால் அது சரியாகும்.
கண் எரிச்சல் -கற்றாழை சோறு தலையில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து வர கண் எரிச்சல் குறையும்.
➤ குடல் புற்றுநோய்களுக்கு கற்றாழை ஜூஸ் குடிக்க பாதிப்பு குறையும்.
➤ வயிறு மற்றும் குடல் சார்ந்த நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக கற்றாழை உள்ளது.
➤ கற்றாழையிலிருந்து வரும் பால் வீக்கங்களை குணப்படுத்தும். இது அடிபட்ட வீக்கங்களையும் கட்டுப்படுத்தும்.
➤ முடி வளர்ச்சிக்கு கற்றாழை பெரும் பங்கு வகிக்கிறது.
பயன்படுத்தும் முறை:
கற்றாழையை சரியாக ஏழு முறை அலசி பின்பே பயன்படுத்த வேண்டும். அவ்வாறாக இல்லை என்றால் கற்றாழை பால் அந்த உணவில் இறங்கி அதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட வழிவகுக்கும்.
தவிர்க்க வேண்டியவர்கள்:
1. கர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
2. ஈசனோபிலியா நோயாளிகள் மற்றும் சளி தொடர்புடைய நோயாளிகள் தவிர்க்க வேண்டும்
வீட்டிலேயே கற்றாழை வளர்ப்பு:
வீட்டிலேயே கற்றாழை செடி வளர்க்க ஆர்வமா இருக்கிறீர்களா? நிச்சயமாக முயற்சி செய்யலாம்! கற்றாழை வளர்ப்பது மிகவும் எளிது. இதோ குறிப்புகள்:
1. நன்கு கலந்த சுண்ணாம்பு சேர்த்த மண் கலவை தயார் செய்யுங்கள்.
2. செடியை நேரடி வெயில் அதிகம் படாத இடத்தில் வையுங்கள்.
3. மண் வறண்டுபோகும்போது மட்டுமே நீர் ஊற்றுங்கள். அதிகமாக நீர் ஊற்றுவதைத் தவிர்க்கவும்.
உடல் சூட்டுக்கான சிறந்த மருந்து கற்றாழை.இதன் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள காணொளியை பார்க்கவும்.
- https://youtu.be/DonyB3xAodY?si=HmAXknPMBRTWUIkS