Varma Kalai in Tamil

சர்க்கரை நோய்க்கான சிறந்த சித்த மருத்துவம்

சர்க்கரைநோய்க்கும் சித்த மருத்துவம்: ஒரு பார்வை (Diabetes and Siddha Medicine)

❖ சித்த மருத்துவம், தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக செழித்து வளர்ந்து வரும் ஒரு பாரம்பரிய மருத்துவ முறை. இது உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் சமநிலையில் வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறது. சர்க்கரைநோய் (மதுமேகம்) உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க சித்த மருத்துவத்தில் பல மூலிகை மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

சித்த மருத்துவத்தில் சர்க்கரைநோய் வகைகள்:

சித்த மருத்துவத்தில் சர்க்கரைநோய் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது:

1. மதுமேகம்:இது ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவுடன் தொடர்புடையது.

2. சிறுநீர் மதுமேகம்:இது சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதைக் குறிக்கிறது.

3. சீதாங்க மதுமேகம்: இது உடல் எடை இழப்பு, சோர்வு மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஒரு வகை சர்க்கரை நோய் ஆகும்.

சித்த மருத்துவத்தில் சர்க்கரைநோய்க்கான சிகிச்சைகள்:

சித்த மருத்துவத்தில் சர்க்கரைநோய்க்கு பல சிகிச்சைகள் உள்ளன, அவை பின்வருமாறு:

1. மூலிகை மருந்துகள்:சர்க்கரைநோய்க்கு சிகிச்சையளிக்க பல்வேறு மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. சில பொதுவான மூலிகைகள்: வேப்பிலை, நாவல், கீழாநெல்லி, ஆவாரை மற்றும் முடக்கத்தான்.

2. உணவுக் கட்டுப்பாடு:சர்க்கரைநோய்க்கு சிகிச்சையளிப்பதில் உணவுக் கட்டுப்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. சித்த மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான உணவு முறையை பரிந்துரைக்கின்றனர்.

3. வாழ்க்கை முறை மாற்றங்கள்: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த, நோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதில் உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்றவை அடங்கும்.

4. யோகா மற்றும் பிராணாயாமம்: யோகா மற்றும் பிராணாயாமம் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த உதவும் பயனுள்ள நடைமுறைகள்.

சித்த மருத்துவத்தின் நன்மைகள்:

1. சித்த மருத்துவ யோக பயிற்சி

2. நோயின் மூல காரணத்தை குணப்படுத்துகிறது:சித்த மருத்துவம் நோயின் அறிகுறிகளை மட்டும் அல்லாமல், நோயின் மூல காரணத்தையும் குணப்படுத்த முயற்சிக்கிறது.

3. முழுமையான அணுகுமுறை: சித்த மருத்துவம் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றையும் சமநிலையில் வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறது.

சித்த மருத்துவத்தைப் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியவை:

காப்பு நீக்கம் நிறைப்பு ஆகிய வழிமுறைகளின் மூலம் சர்க்கரை நோயை, சித்த மருத்துவத்தின் முறைப்படி சரி செய்யலாம்.

காப்புஎன்பது சர்க்கரை நோயிலிருந்து பாதுகாப்பது

நீக்கம் என்பது சர்க்கரை நோயினை நீக்குவது

நிறைப்பு என்பது சர்க்கரை நோயினால் வரும் நோய்களை தடுப்பது

❖ சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தலாம்.இது மதுமேக நோய் எனவும் அழைக்கப்படும். 30 வருடங்களுக்கு முன்பே இதற்கு சித்த மருத்துவத்தில் மருந்து கூறப்பட்டுள்ளது. இன்சுலின் மட்டுமே நீரிழிவு நோய்க்கான மருந்து அல்ல. கொழுப்பு உடலில் அதிகமாக உள்ளதால் இன்சுலினால் வேலை செய்ய இயலவில்லை. ஆகவே தான் உடலில் நீரிழிவு நோய் உருவாகிறது.

❖ இன்சுலின் சுரப்பினை சரி செய்யவே சித்த மருத்துவத்தில் வழி கூறப்பட்டுள்ளது. நாவல் கொட்டை, நாவல் பழம் ஆகியவற்றினை உண்ணும் போது குளுக்கோஸ் உடலில் சேரவில்லை என்பதை கண்டறிந்துள்ளனர் இன்றைய ஆய்வாளர்கள்.

நீரிழிவு நோய்க்கான சித்த மருத்துவ மருந்துகளாக கூறப்படுவது:

1. நாவல் பழம், சிறியா நங்கை, ஆவாரை செடி, கோவக்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது இன்சுலின் சுரப்பை சரி செய்கிறது.

Diabetes reversal (நீரிழிவு குறைப்பு)

❖ மருந்தில்லா மருத்துவத்தின் மூன்று முறைகள் உள்ளது.

1.சித்த மருத்துவ யோக பயிற்சி

2. சித்த மருத்துவத்தின் படி உணவு வகைகள் கையாள்வதன் மூலமும்

3. சித்த மருத்துவத்தின் படி நம் வாழ்வியல் முறையை செய்வதன் மூலமும் நோயினை சரி செய்யலாம்

❖ நவீன மருத்துவம் எவ்வாறு சர்க்கரை நோயை கையாள்கிறது என்பதை காணலாம்.

1.புதிதாக இன்சுலினை சுரக்க செய்யக்கூடிய மருந்துகள்

2.இன்சுலின் சுரப்பினை தாமதப்படுத்தக்கூடிய மருந்துகள்

3.இன்சுலின் செயல்பாட்டினை சரி செய்ய தேவையான மருந்துகள் ஆகியவற்றின்படி கையாள்கிறது.

❖ நம் வாழ்வியல் முறையை சமன் செய்வதன் மூலம் சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோயினை சரி செய்யலாம். இப்போது இதற்கு புத்தக வடிவில் எதுவும் இல்லை. ஆனால் இவை எங்கள் அனுபவத்தின் வழியாக நாங்கள் கண்டவை. இதற்கான ஆராய்ச்சியை மணிப்பால் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம்.

❖ ஒருங்கிணைந்த மருத்துவத்தின் நோக்கம் என்னவென்றால்,

1. பக்க விளைவுகளை குறைப்பது

2. மருந்தின் அளவை குறைப்பது

3. நோயினால் ஏற்படும் சிக்கல்களை குறைப்பது மேற்சொன்ன காரணங்களுக்காகத்தான் பயனாளிகள் சித்த மருத்துவம் மற்றும் நவீன மருத்துவம் ஆகியவற்றை இணைத்து எடுத்துக் கொள்ளலாம்.

❖ பழக்கவழக்க மாறுபாடுகளால் அடுத்த தலைமுறைக்கு நீரிழிவு நோய் கடத்தப்படலாம். அதனை தடுக்கும் முறைகளாக,

1. அதிக எடையுடன் உள்ள குழந்தைகளின் எடையை குறைக்க வழிவகை செய்ய வேண்டும்.

2. தினமும் யோகாவும் பயிற்சிகளும் மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் .

3. உணவுப் பழக்க வழக்கங்களிலும் சில கட்டுப்பாடுகள் தேவைப்படும் சர்க்கரைநோயுடன் வாழ்வது சவாலானதாக இருக்கலாம், ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் ஆதரவுடன், நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த முடியும்.

GCSMR என்ற எங்களது தொண்டு நிறுவனம் சித்த மருத்துவத்தை பரப்பும் முயற்சியில் பல்வேறு புத்தகங்களை வெளியிட்டு வருகிறது இவற்றின் மூலம் மாணவர்களும் பொதுமக்களும் பயனடையும்படியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிக்கு நன்கொடை தந்து உதவுமாறு உங்களை வேண்டுகிறோம்.

Join us in our endeavor to bring the wisdom of Siddha to the world and enable individuals to lead healthier lives.