கண்களின் நலனுக்கான நந்தியாவட்டை பூ மருத்துவ பயன்கள்
நந்தியாவட்டை:
1. இரவில் நான்கு முதல் ஐந்து பூக்களை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.இதனை ‘ஊறல் குடிநீர்’
என்றும் அழைப்பர். இந்த நீரினை கண்கள் கழுவ பயன்படுத்தலாம்.
2. இந்த பூக்களை நன்கு கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அதனை ஒரு சொட்டு கண்களில் விட்டு
கழுவலாம்.
3. இளம் பூவினை எடுத்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து ஒரு ஒரு சொட்டு இரு கண்களுக்கும்
விடலாம்.
4. நல்லெண்ணெய் மற்றும் 10 பூக்களை இளஞ்சூட்டில் வைத்து சூடு படுத்தி வைத்துக் கொண்டால் ஒரு
ஒரு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறையும் கண்களில் இட்டு ஐந்து நிமிடம் ஓய்வெடுத்தால் கணினி
மற்றும் கைபேசி பார்ப்பவர்களின் கண்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.
5. ஐந்து பூக்களை எடுத்து இரு கண்களின் மேலும் வைத்து ஒரு துணியினால் கட்டி ஐந்து நிமிடம்
கழித்து அவிழ்த்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியினை தரும்.
6. இது நம் கண்களுக்கு ஏற்ற மிக அருமருந்து ஆகும்.
GCSMR is seeking your support to promote Siddha medicine as alternative medicine to cure
several health issues.
நந்தியாவட்டை பூவின் மருத்துவப் பயன்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த காணொளியை காணலாம்.
- https://youtu.be/oxosgNb2ciw?si=Tqx_mxiT75OE-vvF