நொச்சி
❖ சிறுமர வகையைச் சார்ந்தது. ❖ 3 அல்லது 5 கூட்டிலைகளைகலாக, ஈட்டி வடிவ இலைகளின் மேல்புறம் பசுமையாகவும், அடிப்பகுதி சற்று வெளுத்தும் காணப்படும். ❖ நொச்சியின் மலர் நீலமணி நிறத்தில் இருக்கும்.
வகைகள்:
❖ வெண்ணொச்சி ❖ கருநொச்சி ❖ நீலநொச்சி ❖ நீர்நொச்சி ❖ மயிலடி நொச்சி
வெண்ணொச்சி:
❖ வெள்ளை நிற கிளைகளுடன் காணப்படும். ❖ ஆற்றோரங்களில் 30 அடி உயரம் வரை வளரும். ❖ கிளை இல்லாத மரங்கள் 6-7 அடி உயரம் வளரும். ❖ நொச்சி மரங்களை வெட்டி வேலி அமைக்கப்படும்.
வரலாற்று குறிப்புகள்:
❖ தித்தன் என்ற அரசன் காலத்தில் உறையூர் காவற்காட்டில் நொச்சி வளர்ந்திருந்தது. ❖ நெடுங்கிள்ளியை நலங்கிள்ளி முற்றுகையிட்டபோது உறையூருக்கு நொச்சி மதில் இருந்தது.
பயன்கள்:
❖ நொச்சிப்பூ நீண்ட கொத்தாக மயிலை நிறத்தில் பூக்கும். ❖ இளம் மரங்களை கொண்டு மண் சுமக்க உதவும் தட்டுக்கூடைகள் பின்னிக்கொள்வார்கள். ❖ வேலியாக இருந்த 'நொச்சி' என்னும் சொல் மதிலைக் குறிக்கும் சொல்லாகவும் இலக்கியங்கள் பயன்படுத்திக்கொண்டன.
மருத்துவப் பயன்கள்:
1. அலர்ஜி, சைனஸ் மற்றும் சளி தும்மல் ஆகியவற்றிற்கு ஐந்து இலையினை எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் மூடியிட்டு கொதிக்க வைத்து ஆவியினை பிடிக்கலாம். 2. மூட்டு வலிக்கு சிறந்த மூலிகையாக நொச்சி உள்ளது. நொச்சி இலையினை எடுத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி முட்டியில் ஒத்தடம் கொடுத்து இந்த வதக்கிய இலையினை முட்டியில் இரவு முழுவதும் வைத்து கட்டிவிட வேண்டும். பின்பு மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் பொழுது வலி குறைந்து இருப்பதை காணலாம். 3. வாதம் அதிகமாவதால் வரும் நோய்களையும் கபம் அதிகமாவதால் வரும் நோய்களையும் குணப்படுத்தும் சிறந்த மூலிகையாக நொச்சி உள்ளது. 4. ஆஸ்துமா, சளி ,கால் வலி ,மூட்டு வலி ஆகிய நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. 5. நொச்சி இலையினை வேகவைத்து பொட்டலம் போல் போட்டு மார்பின் மேல் ஒத்தடம் கொடுத்து வர மார்பு சளி இலகி வெளிவருவதை காணலாம். 6. உடல் வலிக்கு நொச்சி இலையினை கொதிக்க வைத்து அந்த ஆவியினை பிடித்து வர உடல் வலி நீங்கும். 7. தானியத்தில் வரும் பூச்சிகளை தவிர்க்க நொச்சி இலையினை ஒரு துணியில் வைத்து கட்டி அதனுள் போட்டு வைத்தால் பூச்சிகளை விரட்டும். 8. நாள்பட்ட சளிக்கு நொச்சி இலையினை பதப்படுத்தி தலையணை போல் செய்து தினமும் அந்த தலையணையில் உறங்கி வர நல்ல முன்னேற்றம் காணலாம். 9. நொச்சி இலையினை காய்ச்சி வீட்டில் வைத்தால் அதன் ஆவி வீடு எங்கும் பரவி கொசுவினை விரட்டும் மருந்தாக பயன்படும். 10. காய்ந்த இலைகள் மற்றும் மஞ்சள் சேர்த்து புகையூட்டினால் கொசுக்களை போக்குவதோடு சிறந்த நச்சுக்கிருமிகளை நீக்குவதாகவும் பயன்படும். 11. தசை பிடிப்பிற்கும் நொச்சி இலையினை கொதிக்க வைத்து அந்த நீரினை தசை பிடிப்பு உள்ள இடத்தில் சிறிது நேரத்திற்க்கு ஒரு முறை விட்டு வர சிறந்த வலி நிவாரிணியாக பயன்படுகிறது.
பழங்காலங்களில் நொச்சி வேலியாக பயன்படுத்தப்பட்டது.இதன் மருத்துவப் பயன்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த காணொளியை காணலாம். - https://youtu.be/rTJCINBX0dg?si=-yHEMz8cZxIeO81I