அமெரிக்க நாட்டு
மருத்துவ கல்லூரி மாணவர்களை
கவர்ந்திழுக்கும் தமிழக வர்ம சிகிச்சை:
கர்நாடக மாநிலம்
உடுப்பி மாவட்டம் மணிப்பாலில்
உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பு
முடித்துவிட்டு
பட்ட மேற்படிப்பாக வர்ம சிகிச்சை படிப்பை
முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று
மணிப்பால் பல்கலைக்கழக அரங்
கத்தில் நடந்தது.
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் டாக்டர் அருள் அமுதன்
கூறும் போது, 'வர்ம சிகிச்சையானது நாட்பட்ட மூட்டு வலிகள்
எலும்பு மற்றும் தசை நோய்கள்
முதுகெலும்பு நோய்கள், நரம்பு
நோய்கள் என பல தீராத நோய்களுக்கு சிறப்பாக பலனளிக்கிறது.
இந்த சிகிச்சைக்காக உலகெங்கும்
இருந்து மக்கள் தமிழ்நாட்டுக்கு
தேடி வருகின்றனர். இதை அமெரிக்காவை சேர்ந்த தமிழரான இதய
வியல் நிபுணர் டாக்டர் ஜானகி
ராமன் முயற்சியின் காரணமாக
கர்நாடக மாநிலம் மணிப்பால் பல்
கலைக்கழகத்தில் ஒரு படிப்பாக
கொண்டு வந்தார். தமிழகத்தில்
சென்னை உள்ளிட்ட பல்வேறு
நவீன மருத்துவம் மற்றும் சித்தா
ஆயுர்வேதா போன்ற ஆயுஷ் மருத்
துவங்களை ஐந்தரை ஆண்டுகள்
பட்டபடிப்பாக படித்தவர்களுக்கு
பட்ட மேற்படிப்பாக பயிற்றுவிக்
கப்படுகிறது என்றார்.பயிற்சிமுடித்தவர்களுக்கு பல்கலைகழக
சார்பு துணைவேந்தர் டாக்டர் சரத்குமார்ராவ் சிறப்பு விருந்தின
ராக கலந்து கொண்டு சான்றிதழ்
களை வழங்கினார்.இந்தியா மட்டுமல்லாதுஅமெரிக்க நாட்டின் மருத்துவக்
கல்லூரி மாணவர்கள் இந்த சித்த
வர்ம சிகிச்சை படிப்பதற்காக ஆர்வம் காட்டுகின்றனர் என்பதற்கு
உதாரணமாக அமெரிக்காவின்
அட்லாண்டாவில் உள்ள மோர்
ஹவுஸ் மருத்துவக் கல்லூரியை
சேர்ந்த 4 மாணவிகள், 2 பேராசி
ரியர்கள் உதவியோடு இங்கு வந்து
இந்த வர்ம சிகிச்சை படிப்பதற்காக மணிப்பால் பல்கலைக்கழகம்
வந்துள்னர் என்பது குறிப்பிடத்
தக்கது.