வணக்கம்.
தமிழரின் மருத்துவக் கலையினை உலகமெல்லாம் பரவச் செய்ய சித்த மருத்துவம் மற்றும்
ஆராய்ச்சிக்கான
உலகளாவிய மையம் முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதி மரபு மருத்துவப்
புதையல்களை ஆவணப் படுத்துதல் ஆகும். அவ்வழியே மரபு வழி மருத்துவர் மா. சண்முகம் ஐயா
அவர்களின்
நுட்பமான மருத்துவ குறிப்புகள் மருத்துவர் அருள் அமுதன் மற்றும் மருத்துவர் மேனகா ஆகியோரின்
துணையுடன் "சித்த மருத்துவ பயிற்சி கையேடு" எனும் நூலாக மலர்ந்தது.
இந்த நிகழ்வு ஆவணித்திங்கள் 29 ஆம் நாள் (14.9.2025) ஞாயிற்றுக்கிழமை செ.தெ. நாயகம்
தியாகராய
நகர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்புற நடைபெற்றது.
இந்த நூல் வெளியீடானது, சித்த மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கான உலகளாவிய மையத்தின்
தலைவர்,
திருமிகு. தெ. சிவசைலம்
மற்றும் இந்திய நல வாழ்வு நல்லறம் தலைவர்,திருமதி. சுபா தெய்வநாயகம் ஆகியோரது தலைமையில்
சிறப்புற நடைபெற்றது.
தமிழ் தெய்வ வாழ்த்து மற்றும் சித்தர் வணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் சித்த மருத்துவம்
மற்றும் ஆராய்ச்சிக்கான உலகளாவிய மைய செயலர் செந்தாமரை பிரபாகர் அவர்கள் வரவேற்புரை
நிகழ்த்தினார்.
இந்திய நல வாழ்வு நல்லறம், சென்னை அமைப்பின் தலைவர் திருமதி. சுபா தெய்வநாயகம் தலைமையுரை
ஆற்றினார். இந்திய நல வாழ்வு நல்லறம் அமைப்பின் செயலர் மருத்துவர் ப.செல்வ சண்முகம் நூலைப்
பற்றி எடுத்துரைத்தார்.
அடுத்ததாக சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், ஆயுஷ் அமைச்சகத்தின் தலைவர்,
என்.ஜே.முத்துக்குமார் அவர்கள் நூலினை வெளியிட்டு சிறப்பித்தார்.
தேசிய சித்த மருத்துவ நிறுவனம் ஆயுஷ் அமைச்சகத்தின் இயக்குனர், ஜி.செந்தில் வேல் அவர்கள்
நூலினை
பெற்று கொண்டார்.
பிறகு இந்திரா காந்தி அணு மின் நிலையம்,கல்பாக்கம் விஞ்ஞானி த.வெ.நடராசன் அவர்கள் , சாய்
ராம்
சித்த மருத்துவ & ஆராய்ச்சி மையம்,சென்னை,துணை முதல்வர்.மருத்துவர் என்.ஆர்.பன்னீர்செல்வம்
அவர்கள், வேலு மயிலு சித்த மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, சென்னை, முதல்வர்.மருத்துவர்
கே.பாலகுருசாமி அவர்கள்,அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை, முதல்வர்.மருத்துவர்
எ.கணேசன்
அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்து கொடுத்தனர்.
அதன் பின்னர்,மரபு வழி மருத்துவர் மா. சண்முகம் அவர்கள்,மருத்துவர். அருள் அமுதன் அவர்கள்,
மருத்துவர். மேனகா அவர்கள் இந்நிகழ்ச்சியில் ஏற்புரை ஆற்றினர்.
இறுதியாக இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் மூலிகை தேநீர்
வழங்கப்பட்டதுடன் நிகழ்வு நிறைவடைந்தது.