❖ வணக்கத்துக்கு தொடர்புடைய விரல் முத்திரைகள், அவற்றின் பயன்கள், முத்திரை செய்யும் முறை போன்றவற்றை காண்போம், இவை பஞ்ச பூதங்களை ஒன்றாக இணைப்பது. இது ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு நமக்கு பயனளிக்கும்
தாய் வணக்கம்: தாயை வணங்கும்போது வயிற்றுக்கு நேராக வைத்து வணங்க வேண்டும். இதனால் நமது வயிற்றுக்கு பின்னால் உள்ள மணிபூரகம் ஆற்றல் மையம் ஒன்றிணைந்து அன்பு கூடுதலாக கிடைக்கும்.
தந்தை வணக்கம்: தந்தையை வணங்கும்போது நம் மார்போடு இரு கைகளையும் கூப்பி வணங்க வேண்டிய வணக்கமாகும், இது அனாதக சக்கரத்தை தூண்டி அறிவினை வலுப்பெறச் செய்யும்.
ஆசிரியர் வணக்கம்: இது நமது வாய்க்கு நேராக நாம் கைகளை கூப்பி வணங்க வேண்டிய வணக்கம். இதனால் நம் வாக்கு,சொல் வலிமை பெறும்.
இறை வணக்கம்: இது நமது தலைக்கு மேலே இரு கைகளையும் கூப்பி வணங்க வேண்டிய வணக்கம். இதனால் நாம் நம் உலகத்தோடு ஒரு தொடர்பு ஏற்படுவதாக உணர்வு பெறுவோம்.
இதனை விளக்கமாக அறிய மற்றும் மேலும் கூடுதல் தகவல் அறிய கீழ்காணும் காணொளியை பார்க்கவும். காணொளி: https://www.youtube.com/watch?v=lC6QSrXPXNs&t=958s
GCSMR என்ற எங்களது தொண்டு நிறுவனம் உயரிய சித்த மருத்துவத்தை உலகெங்கும் பரப்ப முயற்சி செய்து வருகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு கொண்டு சித்த மருத்துவ படிப்புகளை மாணவர்களுக்கு கொண்டு செல்வது, மருத்துவமனைகளில் சித்த மருத்துவ பிரிவுகளை கொண்டு வருவது என பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதற்காக நன்கொடை தருமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.