துளசி மருத்துவ பயன்கள்

துளசி மருத்துவ பயன்கள் - Tulasi Benefits

துளசி: புனித மூலிகை

துளசி, புனிதமான மூலிகை, இந்து மதத்தில் மிகுந்த மதிப்புடையது. இதன் மணம் நறுமணம் வீசும் இலைகள், மருத்துவ குணங்கள் நிறைந்தவை, வீடுகளிலும் கோயில்களிலும் வளர்க்கப்படுகிறது.

பயன்பாடுகள்:

❖ கோயில் பூஜை: துளசி, குறிப்பாக பெருமாள் கோயில்களில் பூஜைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் நறுமண இலைகள், மாலையாக கோர்க்கப்பட்டு தெய்வங்களுக்கு அணிவிக்கப்படுகின்றன.
❖ வீட்டு வழிபாடு:பல வீடுகளில் துளசி செடி வளர்க்கப்பட்டு, தினமும் பூஜை செய்யப்படுகிறது. துளசி இலைகளை தீபம் ஏற்றும்போது பயன்படுத்துவது வழக்கம்.

வேறு பெயர்கள்:

துழாய் (நீல நிற துளசி)
துளவம்
மாலலங்கல்
ஸ்ரீதுளசி
ராமதுளசி

வகைகள்:

நல்துளசி
கருந்துளசி
செந்துளசி
கல்துளசி
முள்துளசி
நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)
காட்டுத் துளசி

துளசியின் சிறப்புகள்:

துளசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சளி, இருமல் போன்ற சுவாச நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.
மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
புனிதமான தாவரமாக கருதப்படுவதால், வீட்டில் துளசி செடி வளர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

துளசி: மத, மருத்துவ, வீட்டு பயன்பாடுகளுக்கு உரிய புனித மூலிகை.

மருத்துவ பயன்கள்

1. துளசி வளர்ப்பதால் சுற்றுப்புறத்தில் இருந்து பூச்சிகள் வருவதை தடுக்கலாம்.
2. இதன் நறுமணம் ஒரு விதமான மன பதட்டத்தை குறைக்கும்.
3. இது கிருமி நாசினியாக உள்ளது.
4. கருந்துளசி என ‘கிருஷ்ண துளசி’ எனவும் அழைப்பர்.
5. தினமும் துளசி சாப்பிட்டால் பாக்டீரியா எதிர்ப்பு (ஆன்டி பாக்டீரியா), வைரஸ் எதிர்ப்பு (ஆன்டிவைரஸ்) ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக இன்றைய விஞ்ஞானிகள் இதை கண்டறிந்துள்ளனர்.
6. ஒரு துளசியினை எடுத்து மென்று தின்றால் நுரையீரல் சளியினை குணப்படுத்தும். சிறு குழந்தைகளுக்கு இதன் சாறுடன் தேன் கலந்து கொடுக்கலாம்.
7. தினமும் துளசி சாப்பிட்டால் கப நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்து ஆகும்.
8. காய்ச்சலை குணப்படுத்தும் மன அழுத்தத்தை குறைக்கும் வயிற்றுப் பூச்சிகளை நீக்கும்.
9. மூச்சுப்பாதை சளி, நுரையீரல் சளிகளுக்கு சிறந்த மருந்தாக துளசி உள்ளது. ஒரு துளசி + ஒரு மிளகு+தேன் கலந்து தினமும் தின்று வர நுரையீரல் சளியினை சரி செய்யும்.
10. காய்ச்சலின் போது ஐந்து துளசி இலை +இரண்டு மிளகு எடுத்து இடித்து கசாயம் ஆக்கி அடிக்கடி குடித்து வர காய்ச்சலின் தீவிரம் குறையும்.

Ocimum tenuiflorum or Ocimum Sanctum possesses or Tulsi antioxidant properties that help in respiratory Health, Immunity, Stress Relief and Skin Care. GCSMR seeks your donation for promoting Siddha medicine for holistic wellbeing and affordable alternative healthcare.