மலச்சிக்கல் தீர்வு

மலச்சிக்கலுக்கான வீட்டு வைத்தியம் - மருத்துவர் செல்வ சண்முகம்

உடலின் ஆரோக்கியம் மேம்பட நாளும் மலம் எளிதாக வெளியேறிட வேண்டும். அதற்கான சில எளிய முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. விளக்கெண்ணெய்- 5 எம்எல் விளக்கெண்ணையை எடுத்து காலை மற்றும் மாலை வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்த வேண்டும்.

2. திரிபலா சூரணம்- ஒரு டீஸ்பூன் சூரணத்தை தண்ணீரில் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

3. வெந்தயம்-ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை எடுத்து நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதனை மென்று தின்ன வேண்டும்.

4. முளைகட்டிய பயிறு வகைகள் ,விதையுடன் கூடிய திராட்சை மற்றும் இஞ்சி சாறு ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

5. கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

6. மேற்கு வகை கழிப்பறைகளை தவிர்த்து, இந்திய வகை கழிப்பறைகளை பயன்படுத்தவும்.

மேலே குறிப்பிட்ட வகையில் நமது நாள் ஒழுக்கத்தை அமைத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், நோய்கள் நீங்கும்.

மேலதிக விவரங்களை அறிய இந்த காணொளியை பார்க்கவும்.
காணொளி: https://www.youtube.com/watch?v=GcC5NXcuOjA&t=49s