சிறிய வெங்காயம்:சிறிது நல்லெண்ணையில் 5 சிறிய வெங்காயத்தை எடுத்து நன்கு வதக்கி காலை மாலை என இருவேளையும் உண்டு வர மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
பிடிக்கருணை:பிடிக்கருணையை நன்கு வேகவைத்து அதனை நன்கு மசித்து சிறிது அளவு புளி சேர்த்து சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி மசியல் போல செய்து உண்டு வர மூலநோய் சரியாகும்.
சிறுமூளையிலிருந்து பிரிந்து வரக்கூடிய நரம்பு கற்றைகளில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தலைசுற்றல் ஏற்படலாம்
காது சார்ந்த நோய்கள் வரும் போது தலை சுற்றல் ஏற்படலாம்
உள்காதில் சில நரம்புகள் முடி போல காதில் உள்ள திரவத்தில் மிதந்து கொண்டிருக்கும். இதற்கு ‘வெஸ்டிலோ காக்கிலியர் நர்வ்’ என்று பெயர். இதில் எந்த ஒரு சிறு பாதிப்பு இருந்தாலும் தலை சுற்றல் ஏற்படலாம்.
காய்ச்சல் அதிகமாக இருந்தால் தலைசுற்றல் வரும். தலைவலி அதிகமாக இருந்தால் தலைசுற்றல் வரலாம். ஒரு பக்க தலைவலி இருந்தாலும் தலை சுற்றல் ஏற்படலாம். அதிக வயிற்று வலி இருந்தால் தலைசுற்றல் ஏற்படலாம். பித்தம் அதிகமானால் தலை சுற்றல் ஏற்படலாம்.
உடலும் உடல் அமைப்பும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். உடலில் பித்தம் அதிகமானால் வாந்தி, கண் எரிச்சல், முடி உதிர்தல் ,தோல் வறட்சி ஆசனவாயெரிச்சல், சிறுநீர் போகும் போது எரிச்சல் ஆகியவை அறிகுறியாக காணப்படும்.
பித்தம் என்பது தெர்மல் எனர்ஜியாகும். பித்தம் என்பது உணவை செரிக்க வைக்க மற்றும் உடலில் வளர்ச்சிதை மாற்றத்திற்கு காரணமாக இருக்கக் கூடியது.
வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படக்கூடிய சில கழிவுகளை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டால் தலை சுற்றல் ஏற்படலாம்.
இயற்கையாகவே உடல் பித்தம் அதிகமானால் வாந்தியின் மூலம் சரி செய்யும் அல்லது குறைத்துக் கொள்ளும்.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேல் தலை சுற்றல் இருந்தால் மருத்துவரை அணுகலாம். எவ்வித காரணமும் இன்றி தலைசுற்றல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
இஞ்சிதேன் தோல் நீக்கிய இஞ்சியினை பசு நெய்யில் குறைந்த தீயிலிட்டு நன்கு வதக்கி அதன் ஈரத்தன்மை நீங்கும் வரை வதக்கி ஆற விடவும்.அதனுடன் தேனும் பனைவெல்லப்பாகும் சம அளவில் கலந்து இஞ்சியை அதிலிட்டு உண்டு வரலாம். இந்த இஞ்சி தேன் இளமையினை பாதுகாக்க உதவும்.
கருப்பு உளுந்து உளுந்தினை தோலுடன் தான் பயன்படுத்த வேண்டும். கரு உருவாக வேண்டும் என்றால் கருப்பு உளுந்தினை பயன்படுத்த வேண்டும். இது குழந்தை உண்டாக தூண்டக் கூடியதாக அமையும். ஆகவே தோளுடன் உளுந்தினை பயன்படுத்த வேண்டும்.
ஒரு பெண் பூப்பெய்தியவுடன் அவளுக்கு உளுந்தங்களி, உளுந்தஞ்சோறு,உளுந்து வடை ஆகியவை அளிக்கப்படும். ” பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில் உளுந்து வடையினை எவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கருப்பு உளுந்தினை தயிரில் ஊற வைக்க வேண்டும். இதனை அரைத்த பிறகு நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுத்து அதில் ஒரு பகுதியினை வெட்டி தேனில் ஊறவைத்து உண்ண வேண்டும் என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.
உளுந்து மிகப்பெரிய தாதுக்கள் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
குடல் நுண்ணுயிரிகளில் ஊட்டச்சத்தினை கூட்டி உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்கிறது.
மூளை ஆற்றல் மேம்படுகிறது.
எலும்பின் பலம் கூடுகிறது.
இதயத்தின் இயக்கம் சீராகிறது.
இனப்பெருக்க உறுப்பு மண்டலத்தின் தன்மைகள் சீராகிறது.
பூண்டினை இட்லி தட்டில் வேகவைத்து அல்லது வாய்ப்புள்ளவர்கள் பசும்பாலில் ஐந்து நிமிடம் வேக வைத்து அதனை அரைத்து நெய்யில் வதக்கி பனைவெல்லப்பாகில் கலந்து கிளறி வைத்து உண்டால் பெண்களுக்கு நல்லது.
தேனும் அமிர்தம் நெய்யும் அமிர்தம். நெய் காலை மற்றும் மதியம் மூன்று தேக்கரண்டி உண்டால் உடலுக்கு ஆரோக்கியம். அதுவே ஒரு ஸ்பூன் நெய்யும் ஒரு ஸ்பூன் தேனும் சம அளவு கலந்து உண்ணக்கூடாது. இது நஞ்சு. ஆனால் வேறு பொருட்களுடன் தேன் மற்றும் நெய்யினை வெவ்வேறு அளவுகளில் கலந்து உண்ணலாம்.
பொதுவாக அலர்ஜி இருப்பவர்கள், ஆஸ்துமா இருப்பவர்கள்,தோல் மற்றும் குடல் பிரச்சனை உள்ளவர்கள் பாலை தவிர்க்க சொல்வோம். அதற்கு பதில் மோர் அதிகமாக எடுத்துக்கொள்ள சொல்வோம்.. ஆனால் பால் சேர்த்துக் கொள்பவர்கள் பசும்பாலினை நன்கு காய்ச்சி பொங்கி வரும் போது 250 மில்லி லிட்டர் பால் எனில் பத்து துளசி இலைகளை போட்டு அடுப்பில் இருந்து இறக்கி மூடி வைத்துவிட வேண்டும் .சிறிது நேரத்திற்கு பின் துளசி இலைகளை வடிகட்டி விட்டு பனங்கற்கண்டு கலந்து குடிக்கலாம் .இது இருமல் மற்றும் சளிக்கு நல்லது.