கரிசலாங்கண்ணியின் பயன்கள்

Amazing Eclipta Prostrata Benefits and Leaf Uses in Tamil

கரிசலாங்கண்ணி - நமது பாரம்பரிய உணவும் மருந்தும்

நம் முன்னோர்கள் உணவே மருந்தாக பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தனர். நம்மைச் சுற்றி விளையக்கூடிய பல்வேறு மருத்துவ குணமிக்க காய்கறிகள், பழங்கள், கீரைகள், தண்டுகள் மற்றும் வேர்களை உணவில் சேர்த்துக் கொண்டனர்.

கரிசலாங்கண்ணியின் பயன்கள்

சுவையை தாண்டி:

சுவையை மட்டும் கறிவேப்பிலை தருவதில்லை. உண்மையில், பழங்காலத்திலிருந்தே பாரம்பரிய இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கறிவேப்பிலையுடன் தொடர்புடைய சில சாத்தியமான ஆரோக்கிய நன்மைகள்

இரத்த சர்க்கரை கட்டுப்படுத்துகிறது: இரத்த சர்க்கரையை கரிசலாங்கண்ணி இலையில் உள்ள குணங்கள் கட்டுப்படுத்த உதவுகின்றன.

குடல் புண்களை ஆற்றுகிறது: குடல் புண்களை ஆற்றுவதற்கு கரிசலாங்கண்ணியின் இலைகளில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் உதவுகின்றன.

கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது: கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, கல்லீரல் நோய்களின் அபாயத்தையும் குறைக்க கரிசலாங்கண்ணி இலைகள் உதவுகின்றன.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: சரும ஆரோக்கியத்திற்கு கரிசலாங்கண்ணியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உதவுகிறது.

வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது: வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகின்றன.

கரிசலாங்கண்ணியின் பல்வேறு கூடுதல் பயன்கள்:

கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது: கரிசலாங்கண்ணியில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் தலைமுடி உதிர்வைக் குறைக்கிறது. கரிசலாங்கண்ணியில் உள்ள இரும்புச்சத்து கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

எலும்புகளை வலுப்படுத்துகிறது: கரிசலாங்கண்ணியில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் எலும்புகளை வலுப்படுத்தி, முதுமையில் வரும் எலும்பு தேய்வைத் தடுக்க உதவுகிறது.

கண்பார்வை மேம்படுத்துகிறது: கரிசலாங்கண்ணியில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.கரிசலாங்கண்ணி கண் பார்வையை மேம்படுத்துகிறது.

வயதான தோற்றத்தைத் தாமதப்படுத்துகிறது: கரிசலாங்கண்ணியில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் செல்களின் சேதத்தைத் தடுத்து, வயதான தோற்றத்தைத் தாமதப்படுத்துகின்றன.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

கீரையாக சமைத்து உண்ணலாம்: கரிசலாங்கண்ணி கீரையை துவையல், கடைசல், பொறியல் என பலவாறு சமைத்து உண்ணலாம்.

சாறு எடுத்து பருகலாம்: கரிசலாங்கண்ணி இலைகளின் சாறு இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் பிற நோய்களுக்கு மருந்தாக கரிசலாங்கண்ணி இலைகளின் சாறு பரிந்துரைக்கப்படுகிறது.

பொடியாக்கி பல் துலக்குவதற்கு பயன்படுத்தலாம்: ஈறு ஆரோக்கியத்தை மேம்படுத்த கரிசலாங்கண்ணி இலைகளை பொடியாக்கி பல் துலக்குவதற்கு பயன்படுத்தலாம்.

கரிசலாங்கண்ணியின் வேறு பெயர்கள்:

  • ➤ கையாந்தகரை (Kaiyandakarai)
  • ➤ கரப்பான் (Karappan)
  • ➤ கரிசாலை (Karisalai)
  • ➤ கரிச்சை (Karichchai)
  • ➤ கரியசாலை (Kariyasalai)
  • ➤ கரிக்கை (Karikai)
  • ➤ கைகேசி (Kaikesi)
  • ➤ கரிக்கண்டு (Karikkandu)
  • ➤ பிருங்கராஜம் (Bhringaraja)
  • ➤ தேகராஜம் (Degaraja)
  • ➤ கரிசணாங்கண்ணி (Karisanaangkanni)
  • ➤ கரிசணம் (Karisanam)
  • ➤ பொற்றலைக்கையான் (Pottalaikkaayanan) (குறிப்பாக மஞ்சள் கரிசாலைக்கு)
  • கரிசாலை பற்றி மேலும் சில தகவல்கள்:

    1. கண் மை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

    2. சின்ன வெங்காயம்+மிளகு+தேங்காய்+கரிசாலை சேர்த்து உண்ணலாம். இது சிறந்த காயகல்ப மூலிகையாக உள்ளது.

    3. கரிசாலையை உண்டால் ரத்தசோகை நீங்கும். இது அதிக இரும்பு சத்து கொண்டுள்ளது

    இது “வள்ளலார் மூலிகை” எனவும் அழைக்கப்படுகிறது.

    இதன் இலைகளை நிழலில் உலர்த்தி 15 கிராம் -மிளகு பொடி, 100 கிராம்- கரிசாலை பொடி ஒரு டீஸ்பூன் தேன் கலந்து காலையில் உண்டு வர உடலை பலமாக்கும்.

    4. இது எலும்பை வலுப்படுத்தக்கூடிய வகையில் உள்ளது.

    5. இரத்தத்தை அதிகரிக்க நுரையீரலை வலுப்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

    6. கல்லீரலை மேம்படுத்த உதவுகிறது. மிளகுடன் சேர்த்து இந்த கரிசாலையை எடுத்துக் கொள்ளும் போது நம் உடலில் தங்கி அதன் பலன்கள் கிடைக்கும்.

    7. இளநரை மற்றும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.

    8. .தலைமுடி வளர்ச்சிக்கு இதன் பங்கு பெரிய அளவாக உள்ளது. இது மயிர்க்கால்களை தூண்டி மீண்டும் முடி வளர உதவுகிறது .இது பிரிங்கராஜ் என அழைக்கப்படுகிறது.

    10. கரிசாலை தைலத்தினை பயன்படுத்தி வழலை வாங்குதல் என்ற முறையை செய்யும் பொழுது உடலில் உள்ள சளி, மார்பு சளியை நீக்க உதவுகிறது.

    ‘திரு உண்டாம்’ என்பது உடலுக்கு செல்வம் உண்டாக்கும்.
    ‘ஞானத் தெளிவுண்டாம்’ என்பது புத்தி தெளிவை உண்டாக்கும்
    ‘உருவுண்டாம்’ என்பது புதிய சிந்தனைகளை உண்டாக்கும் மூலிகையாக உள்ளது.
    கரிசலாங்கண்ணி பாரம்பரிய உணவு மட்டுமல்ல, இயற்கையான மருந்தும் கூட. இதை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைத்து, ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.

    சித்த மருத்துவம் மற்றும் வர்மா மருத்துவம் தொடர்பான பல்வேறு நூல் வெளியீடுகளை GCSMR தொண்டு நிறுவனம் செய்து வருகிறது, உங்கள் நன்கொடையினை எங்கள் பணிகள் மேலோங்கும்.

    கூந்தல் வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.இதன் மருத்துவப் பயன்களை பற்றி அறிந்து கொள்ள இந்த காணொளியை காணலாம். - https://youtu.be/8P6ciDNB1CE?si=sgLC6htfcWa5zHz6

    Join us in our endeavor to bring the wisdom of Siddha to the world and enable individuals to lead healthier lives.