மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

Neem leaf benefits in tamil - வேப்பிலை பயன்கள் மற்றும் அதன் மகத்துவம்

வேப்பிலை - தமிழ் மண்ணின் மருத்துவ மாமணி

வேப்பிலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் மண்ணின் பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. வேப்ப மரத்தின் இலைகள் மட்டுமல்லாமல், பட்டை, பூ, காய், விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. இயற்கையின் அற்புத கொடையான வேப்பிலையை பற்றிய தகவல்களை இப்போது விரிவாக பார்க்கலாம்.

வேப்ப மரம் :

வேப்ப மரம் வெப்ப மண்டல பகுதிகளில் சாதாரணமாக காணப்படும் ஒரு மர வகை. இது வறட்சி தாங்கும் தன்மை கொண்டதுடன், வேகமாக வளரக்கூடியது. வேப்ப மரத்தின் இலைகள் சிறுசிறு பச்சை இலைகளைக் கொண்டவை, கசப்பு+சுவை கொண்டவை.

வேப்பிலையின் மருத்துவ குணங்கள் :

ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் பண்புகள் : வேப்பிலையில் இருக்கும் ஆ azadirachtin என்ற வேதிப்பொருள் பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ் தொற்றுக்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.

ஆரோக்கியமான சீரணம் : வேப்பிலையின் கசப்பு சுவை செரிமானத்திற்கு உதவும் என்சைம்களை தூண்டி விடுகிறது. இது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை சரிசெய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு : வேப்பிலையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களிலிருந்து காக்கும்.

சரும பாதுகாப்பு : வேப்பிலையின் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் பூண்டு மற்றும் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. மேலும், வெப்பத்தால் ஏற்படும் தடிப்புகள் போன்றவற்றையும் குறைக்கும் குணம் உண்டு.

வாய் ஆரோக்கியம் : வேப்பிலையை மெல்லுவதால் ஈறுகள் மற்றும் பற்கள் பலப்படுவதுடன், துர்நாற்றம் நீங்கி வாய் சுத்தமாக இருக்கும்.

neem leaf benefits in tamil

வேப்பிலையின் பாரம்பரிய பயன்பாடுகள் :

வேப்பிலையை தமிழ் மக்கள் பாரம்பரியமாக பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

⋆ வேப்பிலை சாறு : வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து, தேன் கலந்து குடிப்பது வயிற்றுப்புண் மற்றும் இரத்த சோகை போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

⋆ வேப்பிலை விழுது : வேப்பிலையை அரைத்து விழுது போல் செய்து பூசுதல்

வேப்ப மரத்தின் பற்றி மேலும் சில தகவல்கள் :

➤ கிருமி நாசினியாக உள்ளது

➤ குடல் சுத்தி பொதுவாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட வேண்டும்.

➤ வேப்பிலை + ஒரு பல் பூண்டு+ சீரகம் ஆகியவை சேர்த்து அரைத்து ஏழு நாட்கள் உண்டு பின் எட்டாவது நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் உண்ணலாம். இதன் மூலம் வயிறை சுத்தப்படுத்தும் வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழிக்க உதவுகிறது.

➤ நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக உள்ளது.

➤ வேப்பிலைகள் ஆன்டி பாக்டீரியா(antibacteria infections), ஆன்டிவைரல்(antiviral infections) நோய்கள் விலகி தடுக்க வல்லதாக உள்ளது.

➤ தோல் நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக வேப்பிலை உள்ளது. வேப்பிலை மற்றும் மஞ்சள் அரைத்து தோல் நோய் உள்ள இடத்தில் தடவி வர தோல் நோய் மறையும்.

➤ நாள்பட்ட புண் போன்ற நோய்களுக்கு வேப்பிலை கசாயத்தினை கொண்டு புண்ணை கழுவலாம் அதாவது வேப்பிலையை கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் கழுவினால் புண்ணில் ஏற்பட்டுள்ள கிருமிகளை நீக்கும்.

➤ அம்மை கொப்புளங்களுக்கு வேப்பிலை கசாயத்தினை பயன்படுத்தி கழுவி வரலாம். இதன் மூலம் அம்மையில் ஏற்பட்டுள்ள வைரல் இன்ஃபெக்ஷனை (antiviral infections) தடுக்க வல்லது.

➤ சர்க்கரை நோய்க்கான புண்ணையும், வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து பற்று போட சரியாகும்.

➤ மிளகு, வேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க காய்ச்சல் சரியாகும்.

➤ வேப்பம்பூவில் ரசம் செய்து சாப்பிடலாம். இதன் மூலம் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

➤ காய்ந்த வேப்ப இலைகளை புகையிடுவதன் மூலம் கொசு விரட்டியாக பயன்படுத்தலாம்.

➤ நிலவேம்பு குடிநீர்- டெங்கு ,சிக்கன் குனியா போன்ற நோய்களுக்கு மிகச் சிறந்த கிருமிநாசினியாக உள்ளது.

➤ செடிகளில் பூச்சி விரட்டிகளாகவும் வேப்பிலைசாரினை பயன்படுத்தலாம்.

➤ வேப்பம்பழம் வயிற்றில் உள்ள குடல் புழுக்களை நீக்க வல்லது ஆகையால் வயிற்று புழுக்களை அழிக்க உண்ணலாம்.

➤ வேப்ப மரத்தில் வேப்பம் பட்டை, இலை, பூ மற்றும் பழம் ஆகிய அனைத்தும் உடலுக்கு நன்மை பயப்பனவாக உள்ளது.