❖ தமிழர்களின் மிக முக்கியமான கலை வர்மக்கலை ஆகும், அற்புதமான வர்மக்கலையினைக் கொண்டு சிகிச்சையும் செய்யமுடியும், தாக்குதலையும் நடத்த முடியும், நிகழ் காலத்தில் வர்ம சிகிச்சை முறை ஏராளமான நோய்களுக்கு நிவாரணம் அளிக்க கூடியது.
❖ வர்மக்கலையை வளர்க்க பழங்காலத்தில் நிறைய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டன, குமரி மாவட்டத்தில் அத்தகைய சாலைகள் நிறைய செயல்பட்டதால் இன்று வரை கூட குமரி மாவட்டத்தில் வர்ம சிகிச்சை அதிகம் பயன்பாட்டில் உள்ளது.
❖ பெரும்பாலும் வர்மக்கலையின் பயன்பாடு என்பது பனைமரம் ஏறுபவர்கள், சிலம்பம் விளையாடுபவர்கள், மாடு பிடிப்பவர்கள் போன்றவர்களுக்கு உடலில் அடிபடும் போது அதற்கு சிகிச்சை வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டது.
❖ வர்மக்கலையினை பற்றி சொல்ல வேண்டும் என்றால் உடலில் 72000 நாடி நரம்புகள் உள்ளன, அவற்றில் ஆற்றல் பயணிக்கிறது, கரு உருவாகும்போதே இத்தகைய நாடி நரம்புகள் உருவாகி அங்கு ஆற்றல் பயணிப்பது தொடங்கிவிடுகிறது ஏதேனும் அடிபடும் போது இந்த ஆற்றலை சமன் செய்து சீர் செய்ய வர்மக்கலை உதவியாக இருந்தது
❖ யோகாவுக்கும் வர்மத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. யோகா என்பது நமக்கு நாமே வர்ம புள்ளிகளை தூண்டி விடுவதாகும். வர்மம் என்பது மருத்துவரால் நமது வர்மப் புள்ளிகள் தூண்டி விடப்படுவதாகும்.
❖ வர்மம் நம் உடலில் 553 வர்ம புள்ளிகள் உள்ளது, சில முக்கியமான வர்மப் புள்ளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திலர்த வர்மம்: இரண்டு புருவங்களுக்கு நடுவில் உள்ள புள்ளி இதனை தினமும் ஒருமுறையாவது அழுத்த வேண்டும்.
மேல் தட்டு வர்மம்: உதட்டின் மேல் ஒரு விரலினால் இடது மற்றும் வலது புறவாக்கில் தேய்க்க வேண்டும்.
அன்னான் காலம்: நமது இரு கைகளாலும் மூன்று விரல்களால் இரு நெற்றி ஓரங்களையும் மூன்று முறை தேய்க்க வேண்டும்.
பொற்சை காலம்: நமது இரண்டு கைகளையும் பின்னோக்கி தூக்கி நம் பின் மண்டை ஓட்டின் முனையினை மெதுவாக தேய்க்க வேண்டும். இது கழுத்து வலியை சரி செய்யும்.
மூட்டு வர்மம்: நமது கால் முட்டியிலிருந்து நான்கு விரலுக்கு கீழே உள்ள வர்ம புள்ளியினை தூண்ட வேண்டும். கால் வலி மற்றும் மூட்டு வலிக்கு செய்யப்படும் வர்மமாகும்.
விருத்தி காலம்: காலில் உள்ள வர்ம புள்ளியினை தூண்டுவது .இது நம் காலின் நடுவில் பெருவிரலுக்கு மேலே உள்ள மேட்டின் கீழ் உள்ள வர்ம புள்ளி ஆகும்.
கால் பெருவிரல் வர்மம்: கால் பெருவிரலில் உள்ள வர்ம புள்ளியினை தூண்டுவது. இதை நம் உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் செல்லும் நரம்பின் ஓட்டத்தை தூண்டும்.
மேலே சொல்லப்பட்ட வர்ம புள்ளிகளை செயல் முறை விளக்கத்தோடு அறிய கீழ்காணும் காணொளியை பார்க்கவும். காணொளி: https://www.youtube.com/watch?v=TOEB3D1v67w
GCSMR என்ற எங்களது தொண்டு நிறுவனம் சித்த மருத்துவத்தை பரப்பும் முயற்சியில் பல்வேறு புத்தகங்களை வெளியிட்டு வருகிறது இவற்றின் மூலம் மாணவர்களும் பொதுமக்களும் பயனடையும்படியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிக்கு நன்கொடை தந்து உதவுமாறு உங்களை வேண்டுகிறோம்.