உடலை பாதுகாக்க நான்கு முத்திரைகள்
 • -மருத்துவர் உமா செந்தில்குமார்

 • சித்த மருத்துவம் சொல்வது என்னவென்றால் ஐம்பூதங்களை உள்ளடக்கியதே உடல், அண்டத்தில் உள்ளதே பிண்டம் , பிண்டத்தில் உள்ளதே அண்டம் என்று குறிப்பிடப்படும். இத்தகைய உடலைப் பாதுகாக்க பல்வேறு முத்திரை வகைகள் இருந்தாலும் முக்கியமான நான்கு முத்திரைகள் சொல்லப்பட்டுள்ளது ஒவ்வொன்றுக்கும் ஒரு ஐந்து நிமிடம் என்றபடி இருபது நிமிடங்கள் செய்வது உடலுக்கு நலம் பயக்கும். மிக முக்கியமான விரல் முத்திரைகள் மட்டுமே இங்கே கூறப்பட்டுள்ளது.
முத்திரை வகைகள்
 • 1. ஞான முத்திரை: என்பது ஆட்காட்டி விரல் மற்றும் கட்டைவிரல் ஒன்றோடு ஒன்று இணைக்க வேண்டும் மற்ற மூன்று விரல்கள் நீண்டு இருக்க வேண்டும் கைகளை முட்டியின் மீது வைத்து கண்களை மூடி கவனத்தை நெற்றிப்பொட்டின் மேல் வைக்க வேண்டும். இதனை தினமும் செய்ய வேண்டும்.

  பயன்கள்: கவனத்தை அதிகப்படுத்தும் உறக்கமின்மையை தடுக்கும்.


 • 2. பூரண ஞான முத்திரை: ஞான முத்திரையின் தொடர்ச்சியே இது. ஒரு கையினை முட்டியின் மீது வைத்து மற்றொரு கையினை நெஞ்சில் தொடுமாறு வைக்க வேண்டும். இதனை தினமும் செய்யலாம்.

  பயன்கள்: கவனத்தை ஒருநிலைப்படுத்த உதவும்


 • 3. உயிர் முத்திரை: சுண்டுவிரல்,மோதிர விரல் மற்றும் கட்டைவிரல்களை ஒன்றோடு ஒன்று இணைக்க வேண்டும். கைகளை முட்டியின் மீது வைத்து கவனத்தினை நெற்றி பொட்டின் மீது வைக்க வேண்டும்.

  பயன்கள்: நோய் எதிர்ப்பாற்றலை பெருக்கும், குழந்தைகள் தினமும் இதை செய்ய வேண்டும்


 • 4. புத்தி முத்திரை: கட்டைவிரல் மற்றும் சுண்டு விரல்களை ஒன்றோடு ஒன்று இணைக்க வேண்டும். கைகளை முட்டியின் மீது வைத்து கவனத்தினை நெற்றி பொட்டின் மீது வைக்க வேண்டும்.

  பயன்கள்: மூளை நரம்புகளை வலுப்படுத்தும்.


மேலும் முத்திரை செய்யும் முறை விவரங்களும் செயல் முறை விளக்கமும் தேவையெனில் கீழ்காணும் காணொளியை பார்க்கவும்.

காணொளி: https://www.youtube.com/watch?v=QBHckG9AV2U&t=138s

GCSMR என்ற எங்களது தொண்டு நிறுவனம் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருந்து செயல்பட்டு வருகிறது. சித்த மருத்துவம் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொண்டு நோய்களை கண்டறிதல், வராமல் தடுத்தல், சிகிச்சை, மறுவாழ்வு நடைமுறைகள் போன்றவற்றை தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தை கொண்டு செயல்படுத்துவதே எங்கள் நோக்கமாகும். இந்த பணிக்கு நன்கொடை தந்து உதவுமாறு உங்களை வேண்டுகிறோம்.