வர்மக்கலை

வர்மம் - வலி மேலாண்மை -மருத்துவர் கண்ணன் ராஜாராம்

தமிழர்களின் வர்மக்கலை தற்காலத்தில் வர்ம மருத்துவமாக ஏராளமான நோய்களை குணமாக்குவதிலும், வலிக்கு நிவாரணம் அளிப்பதிலும், துணை மருத்துவமாகவும் சிறப்பாக செயல் படுகிறது. வலி மேலாண்மை பற்றி வர்மத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. வலியை பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.

1.எதிர்பாராத வலி
2.நாள்பட்ட வலி
3.முறிவு வகையான வலி
4.உள்ளுறுப்புகளுக்கான வலி

எதிர்பாராத வலி: என்பதற்கு முறிவு தைலங்கள் மற்றும் மத்தின் தைலம் எனக்கூடிய ஊமத்தை தைலத்தை பயன்படுத்தி இந்த வகையான வலிகளை சரி செய்யலாம். மத்தின் தைலத்தை பயன்படுத்துவதன் மூலம் உடனடியாக வலியும் சரியாவதை நன்றாக உணரலாம். முறிவு தைலம் என்பது சாதாரண வலி, திசுக்களுக்கு இடையேயான வலி,எலும்பு முறிவுக்கான வலி ஆகியவற்றை சரி செய்ய பயன்படுத்தப்படும்.

நாள்பட்ட வலி: நாள்பட்ட வலி என்பது நாம் நினைக்கும் நாட்களை விட அதிகமான காலம் வலி ஏற்படுவது. நாள்பட்ட வலி, புற்றுநோய் வலி, கீழ்வாத வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை சரி செய்ய வர்ம மருத்துவம் பயன்படும். வர்ம மருத்துவத்தின் உதவியுடன் முறிவு தைலத்தை பயன்படுத்துவதன் மூலம் கூடிய விரைவில் வலி சரியாவதை நாம் நன்கு உணரலாம்.

முறிவு வகையான வலி: தசைநார் ,நரம்புகள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றில் ஏற்படும் வலிகளை சரி செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில் 14 முதல் 21 நாட்களில் புது திசுக்கள் உருவாவதை நாம் காணலாம்.

உள்ளுறுப்புகளுக்கான வலி: உள்ளுறுப்புகளின் பாதிப்புகளை சரி செய்ய வர்மத்தினை பயன்படுத்தலாம். வர்மத்தில் உள்ள புள்ளி ஆற்றல்களை பயன்படுத்தி நாம் நம் உள்ளுறுப்புகளின் பாதிப்புகளை சரி செய்யலாம்.

1. நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டால் பிடரி வர்மத்தின் மூலம் சரி செய்யலாம்.
2. பெருங்குடலில் பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்ய நட்சத்திர வர்மம் பயன்படுத்தலாம்.
3. மண்ணீரல் பாதிப்புகளுக்கு பெரிய அத்திக்கு என்ற வர்மத்தினை பயன்படுத்தலாம்.
4. பக்கவாதம் போன்ற நோய்களுக்கு சிறிய அத்திக்கு பயன்படுத்தி சரி செய்யலாம்.
5. இதய வலி இருந்தால் திலர்த வர்மம் என்ற பொதுவான வர்மத்தினை பயன்படுத்தலாம்.
6. சிறுகுடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் செவிவிருத்தி என்ற வர்மத்தினை பயன்படுத்தலாம். இது காது மடலின் ஓரம் பயன்படுத்தப்படும்.
7. சிறுநீரகத்தில் ஏதேனும் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது அடைப்பு வர்மத்தை பயன்படுத்தி சரி செய்யலாம்.
8. சிறுநீர்ப் பை வலி எரிச்சல் ஆக இருந்தால் நேர்வர்மம் என்ற வர்மத்தினை பயன்படுத்தலாம்.
9. ஈரல் பாதிப்பு இருந்தால் தும்மி வர்மம் இதனை பயன்படுத்தி சரி செய்யலாம்.
10. பித்தப்பையில் ஏற்படும் பாதிப்பு அடைப்பு ஆகியவற்றினை உரக்க வர்மத்தினை பயன்படுத்தி சரி செய்யலாம்.
11. தண்டுவடத்தில் ஏற்படும் பாதிப்பினை சரி செய்ய துண்டல் முடிச்சு வர்மத்தினை பயன்படுத்தலாம்.
12. மூளையில் ஏற்படும் பாதிப்பினை சரி செய்ய கல்லணை வர்மம் அந்த வர்மத்தினை பயன்படுத்தலாம். இவை அனைத்தும் படுவர்ம புள்ளிகள் ஆகும். இவை உள்ளுறுப்புகளில் வாசி ஓட்டத்தை தூண்டி சரி செய்ய உதவும்.

முழங்கால் வலி இதை சரி செய்ய மேல் சிரட்டை வர்மம், சிரட்டை வர்மம் நடுவில் உள்ள முட்டுக்கண் வர்மத்தை பயன்படுத்தி தடவல் சிகிச்சை மூலம் இதனை சரி செய்யலாம்.

வலி மேலாண்மையில் தொடு சிகிச்சை மட்டுமே வர்மம் ஆகாது. வர்மத்தில் அமர்த்தல் முறை, இழத்தல் முறை,பின்னல் முறை, தடவல் முறை மற்றும் கட்டுமுறைகள் அடங்கும்.

முழங்கால் மூட்டு வலி போன்ற நோய்களை உள் மருத்துவமின்றி சரி செய்ய இயலாது. ஆனால் மூட்டின் தளர்வுக்கு வர்ம மருத்துவத்தினை பயன்படுத்தலாம். அதிலும் கட்டுமுறையை பயன்படுத்தி குறைந்தது இரண்டு வாரங்கள் கட்டினாலே நல்ல முன்னேற்றம் காணலாம்.

கை மூட்டுகளில்(டென்னிஸ் எல்போ) ஏற்படும் பாதிப்பினை சரி செய்ய கை மூட்டுகளில் உள்ள வர்ம புள்ளியை தூண்டி தைலங்கள் பயன்படுத்தி ஒருமுறை கட்டுமுறை பயன்படுத்தி சரி செய்யலாம்.

ஆனால் இதற்கு முன்பு வர்மத்தின் ஒரு பகுதியாக உள்ள அக்னி கிளி என்னும் வர்மத்தை பயன்படுத்துவது வாயிலாக ஒரு வாரத்திற்குள் சரி செய்யலாம்.

வர்ம மருத்துவத்தில் வர்ம புள்ளிகளை இயக்கி, அமிழ்த்தி,அமர்த்தி, தடவும் முறைகள் பயன்படுத்தி தைலங்களை தீர்த்து சரி செய்யவும், இது மட்டுமின்றி வெளிப்புற மருத்துவத்தையும் மேற்கொண்டு தொடர்ந்து கொடுப்பதனால் விரைவில் நோயினை சரி செய்யலாம்.

பொதுவாக வர்ம மருத்துவம் மனநல பாதிப்புகளை சரி செய்யவும் பயன்படுகிறது . தலைவலி மற்றும் டென்ஷன் ஆகியவற்றை உச்சி வர்மத்தின் மூலம் செய்யலாம். இதனை செய்வதன் மூலம் மனம் ஒருநிலைப்படுவதை நாம் அறியலாம்.

உறக்க வர்மம் செய்வதன் மூலம் மன நிம்மதி பெற்று ஆழ்ந்த தூக்கத்தை அடையலாம்.

புஜவர்மம் செய்வதன் மூலம் தோள்பட்டை வலியில் இருந்து விடுபடலாம். எந்த இடத்தில் நமக்கு வலி ஏற்படுகிறதோ அதை சுற்றியுள்ள வர்மபுள்ளிகளை தூண்டுவதன் மூலம் வலியிலிருந்து விடுபடலாம்.

தலைவலி - திலகவர்மத்தின் மூலம் தீர்வு காணலாம். ஆனால் வர்மத்தினை இங்கு மூன்று விதமாக செய்யலாம்.

1.அழுத்தல்
2.அணுக்கள்
3.அமர்த்தல்

மன நிம்மதி அடைந்து சாந்தத்தை பெற ஆகன சக்கரத்தை சுற்றுவதை நாம் உணரலாம். இது திலர்த வர்மத்திலிருந்து இரண்டு விரல் மேலே உள்ளது. இந்த இடத்தை நாம் தொடும்போதே ஆகின சக்கரம் சுற்றுவதை உணரலாம். இது தலைவலியையும் சரி செய்யும்.

மேலும் விவரமாக அறிய காணொளியினை காணவும். காணொளி: https://www.youtube.com/watch?v=Em9-lsot0cg&t=2245s