முடக்கத்தான் கீரை தமிழ் பாரம்பரிய உணவு முறையில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பல்வேறு நன்மைகள் இருப்பதாகக் கருதப்படலாம்.முடக்கு அறுத்தான் (mudakathan keerai) தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகைக் கொடி வகையை சார்ந்த தாவரம்.முடக்கத்தான் கீரை பயன்கள் பின்வரும் நிலைகளுக்கு பயன்படுத்தலாம்:முடக்கத்தான் பொடி+ முருங்கை மர பட்டை+ பூண்டு ஆகியவற்றை கசாயம் செய்து குடித்து வர மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக உள்ளது தினமும் இதனை எடுத்துக் கொண்டால் பெண்களின் பைப்ராய்ட் கட்டி,மாதவிடாயின் போது ஏற்படக்கூடிய வயிற்று வலி ஆகியவற்றிற்கு முடக்கத்தான் சிறந்த மருந்தாக உள்ளது.முடக்கத்தானை சூப், தோசை மற்றும் அடை போன்ற வகைகளில் எடுத்துக் கொள்ளலாம். சிறிய வெங்காயம் சேர்த்து முடக்கத்தான் அடை செய்து சாப்பிட உடம்புக்கு நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :கொய்யாவில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் போராடவும் உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது : கொய்யாப் பழத்தில் ஃபைபர் அதிகம் உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது : கொய்யாவில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
வேப்பிலை கிருமி நாசினியாக உள்ளது குடல் சுத்தி பொதுவாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட வேண்டும். வேப்பிலை + ஒரு பல் பூண்டு+ சீரகம் ஆகியவை சேர்த்து அரைத்து ஏழு நாட்கள் உண்டு பின் எட்டாவது நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் உண்ணலாம். இதன் மூலம் வயிறை சுத்தப்படுத்தும் வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழிக்க உதவுகிறது. நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக உள்ளது.வேப்பிலை கள் ஆன்டி பாக்டீரியா(antibacteria infections), ஆன்டிவைரல்(antiviral infections) நோய்கள் விலகி தடுக்க வல்லதாக உள்ளது. தோல் நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக வேப்பிலை உள்ளது. வேப்பிலை மற்றும் மஞ்சள் அரைத்து தோல் நோய் உள்ள இடத்தில் தடவி வர தோல் நோய் மறையும்.
அலர்ஜி, சைனஸ் மற்றும் சளி தும்மல் ஆகியவற்றிற்கு ஐந்து இலையினை எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் மூடியிட்டு கொதிக்க வைத்து ஆவியினை பிடிக்கலாம். மூட்டு வலிக்கு சிறந்த மூலிகையாக நொச்சி உள்ளது. நொச்சி இலையினை எடுத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி முட்டியில் ஒத்தடம் கொடுத்து இந்த வதக்கிய இலையினை முட்டியில் இரவு முழுவதும் வைத்து கட்டிவிட வேண்டும். பின்பு மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் பொழுது வலி குறைந்து இருப்பதை காணலாம். வாதம் அதிகமாவதால் வரும் நோய்களையும் கபம் அதிகமாவதால் வரும் நோய்களையும் குணப்படுத்தும் சிறந்த மூலிகையாக நொச்சி உள்ளது. ஆஸ்துமா, சளி ,கால் வலி ,மூட்டு வலி ஆகிய நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. நொச்சி இலையினை வேகவைத்து பொட்டலம் போல் போட்டு மார்பின் மேல் ஒத்தடம் கொடுத்து வர மார்பு சளி இலகி வெளிவருவதை காணலாம். உடல் வலிக்கு நொச்சி இலையினை கொதிக்க வைத்து அந்த ஆவியினை பிடித்து வர உடல் வலி நீங்கும்.
கண் வலி போல் தோன்றினால் காலையில் எழுந்தவுடன் வெங்காய சாரினை கண்ணில் படும்படி செய்யலாம்.இது இதற்கு சிறந்த தீர்வு ஆகும்.சல்பர் உள்ள அமிலம் வெங்காயச்சாரில் இருப்பதால் ஆன்டி பாக்டீரியாவாக(antibacteria infections) இது செயல்படுகிறது.
இதில் பானகம் செய்து குடிக்க உடலுக்கு மிகுந்த நன்மை தரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்தது பானகம். இது அகற்றுவாயு அகற்றி என அழைக்கப்படும் .இதில் சேர்க்கப்படும் சுக்கு மற்றும் ஏலக்காய் செரிமானத்தை தூண்டும் தன்மை உள்ளது. குறைந்த சர்க்கரையை சரி செய்ய இதில் உள்ள சர்க்கரை உதவுகிறது. குடலில் உள்ள கழிவுகளை நீக்க இது சிறந்த உணவாக உள்ளது.நெல்லிக்காய் பயன்பாடுகள் (Uses of Amla / நெல்லிக்காய்) உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மருத்துவ குணங்கள் கொண்டது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது தோல் அழகை பாதுகாக்கிறது சர்க்கரை நோயாளிகளுக்கு பயனுள்ளதாகும் மன அழுத்தத்தை குறைக்கும்
உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இஞ்சியில் பல நன்மைகள் உள்ளன. உடலில் குளிர்ச்சி அதிகமாக இருந்தால் வெப்பத்தன்மையை கூட்டும் ஆற்றலும் உடல் அதிக வெப்பமாக இருந்தால் குளிர்ச்சி தன்மையை தூண்டுமாற்றலும் இஞ்சிக்கு உண்டு.மேலும் பசியினை தூண்டுவதற்கும் அதிகப்படியான பசியினை குறைப்பதற்கும் இஞ்சி உதவும்.இது காயகல்பம் என அழைக்கப்படும். வயிறு மந்தம் காற்றினை சரி செய்ய உதவுகிறது.உணவில் ருசியினை தூண்டுவதற்கும் இது உதவுகிறது. வயிற்றில் உள்ள காற்றினை சரி செய்ய இது உதவுகிறது.செரிமானத்தை மேம்படுத்துகிறது.இருமல் மற்றும் சளிக்கு நல்லது.உடல் வலி மற்றும் மூட்டு வலி குறைக்கும்மன அழுத்தம் குறைக்கும். இஞ்சி, இரத்தத்தை தளர்த்தி, உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
பாகற்காயினை தொடர்ந்து உண்டு வர சிறிது காலங்களில் சர்க்கரை நோயை சரி செய்ய உதவுகிறது.பாகற்காய் என்றால் பாகு+ அற்ற +காய்= பாகற்காய். பாகு என்பது இனிப்பு என்று பொருள். இனிப்பு இல்லாத காய் எனப்படும். பாகற்காயின் பயன்கள் (Uses of Bitter Gourd):சர்க்கரை நோய்க்கு நல்லது (Good for Diabetes): பாகற்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் (Boosts Immunity): இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. புழுக்களை அகற்றும் (Removes Worms): வயிற்றில் உள்ள புழுக்களை நீக்க பாகற்காய் உதவுகிறது.